ஒடாகோவில் உள்ள இரண்டு நகரங்களில் வசிக்கும் மக்கள் கொதிக்க வைத்த நீரை பயன்படுத்தவும் நீரை சேமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் Maniototo நகரில் உள்ள மக்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Patearoa நீர் விநியோகத்தில் குளோரின் அளவில் ஏற்ற இறக்கங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய ஒடாகோ மாவட்ட கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே அளவு சீராகும் வரை, குடியிருப்பாளர்கள் குடிப்பதற்கும், உணவு மற்றும் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பதற்கும், பற்களை சுத்தம் செய்வதற்கும் தண்ணீரைக் கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் பெய்த கனமழைக்கு பிறகு Ranfurly நகரில் உள்ள குடியிருப்பாளர்கள் தண்ணீரை சேமிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். தண்ணீர் ஆலை மீண்டும் சுத்தமான தண்ணீரை உற்பத்தி செய்தாலும், இன்னும் சில அழுக்குகள் நீரில் இருக்கக்கூடும் என்று கவுன்சில் கூறியது.