Breaking News

மத்திய Dunedin இல் டிரக் மோதுண்டு பாதசாரி மரணம்...!!

மத்திய Dunedin இல் டிரக் மோதுண்டு பாதசாரி மரணம்...!!

மத்திய Dunedin இல் இன்று காலை டிரக் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Police street மற்றும் Crawford தெரு சந்திப்பிற்கு அருகில் இந்த விபத்து காலை 8 மணிக்கு முன்னதாக இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட தகவலின்படி, டிரக் பாதசாரி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.‌ பின்னர் குறித்த டிரக் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காட்சி பரிசோதனையின் போது பல மணிநேரங்கள் சாலை தடுக்கப்பட்டு இருக்கும் என்றும் அப்பகுதியை தவிர்க்குமாறும் வாகன சாரதிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சம்பவ இடத்தில் தீவிர விபத்து பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.