ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கி வருகிறது.

கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

இந்த நிலையில் நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு தற்போது கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

துபாய் சென்ற விக்ரமிற்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு இந்த விசாவை வழங்கினர்.

இதுபோல் சமீபத்தில் திருமணமாகி துபாயில் குடியேறி உள்ள நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவரும், தொழில் அதிபருமான ஷானித் ஆசிப் ஆகியோரும் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.