தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு' படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ (பஸ்ட் சிங்கிள்) படக்குழுவால் கடந்த 3-ம் திகதி வெளியிடப்பட்டது.

மொத்தம் 30 விநாடி அளவில் இந்த ப்ரோமோ பாடல் வெளியாகியது.

ரஞ்சிதமே... ரஞ்சிதமே எனத் தொடங்கும் அப்பாடலை விஜய் மற்றும் மானசி எம்.எம் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

எப்போதும் போல விஜய் இப்பாடலில் தாறுமாறான நடனத்தை கொடுத்திருக்கிறார் எனத் தெரிகிறது.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், வாரிசு படத்தின் ரஞ்சிதமே... ரஞ்சிதமே... முழுப்பாடல் இன்று வெளியாக உள்ளது. விஜயின் குரலில் பாடல் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.