வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த அப்டேட் இன்று வெளியாக உள்ளது.

அதாவது இன்று மாலை 6.30 மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் ப்ரமோ வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை படக்குழுவினர் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ இன்று மாலை சரியான சம்பவம் இருக்கு என சமூக வலைதளங்களில் கவுண்டவுனை தொடங்கியுள்ளனர். வாரிசு படத்தில் முதல் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.