உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன் வசப்படுத்திக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த எலான் மஸ்க் தற்போது அதில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் ப்ளூ டிக் வசதி கொண்ட அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதா மாதம் 8 டாலர்(ரூ.660) கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாகப் பல விமர்சனங்களும் புகார்களும் எழுந்து வந்த நிலையில் "புகார்கள் அளிக்கலாம் ஆனால் அதற்கும் 8 டாலர் செலுத்த வேண்டும்" என மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்.

இந்நிலையில் எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு நடிகர் சிபி சத்யராஜ் அவரை கலாய்க்கும் விதமான ஒரு பதில் அளித்துள்ளார்.

"உங்கள் கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்கின் அந்த பதிவை டெக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

சிபி சத்யராஜின் இந்த கிண்டல் பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.