P2P பேரணியின் போது தான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியிருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சிங்கள மக்கள் போராட்டம் நடத்தும் போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்கள் இவ்வாறு பேரணி செல்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

இதன்படி ,குறித்த பேரணி இடம்பெற்ற இடத்தில் தான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியிருப்பேன்.

நாட்டில் அனைவரும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்கள் இது குறித்து விழிப்புடன் இருங்கள். இதற்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். யார் என்னை தடுக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

உங்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் ராஜபக்ஷர்கள் தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள்.

மேலும் எனினும், அவர்கள் செய்வதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.