ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் முக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

அதன்படி ,இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தையே நடத்தப்படுகிறது.

இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தெரியப்படுத்தப்பட்டதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜயவர்த்தனவே ஏற்பாடு செய்திருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது தொடர்பான யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.