செட்டி குளம், கலாசியம்பலாவ தம்பனைக்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டி குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குளத்திற்குச் சென்றவர்கள் குளத்தில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப் பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வீட்டிலிருந்து நேற்றைய தினம் நண்பர்களுடன் சென்ற நிலையில் வீடு திரும்ப வில்லை.

குறித்த இளைஞரை அவரது வீட்டார் தேடி சென்ற நிலை யிலேயே குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, செட்டி குளம், தம் பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஹரிந்து கோசல்யுஸ் வெத்தியாராச்சி வயது 24 என்பது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக செட்டி குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.