வறுமையை ஒழிப்போம் என தெரிவித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் வறியவர்களை ஒழிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அவர்கள் வறுமையை ஒழிப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால்  இப்படி வறியவர்களை ஒழிப்பார்கள் என மக்கள் கருதவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு அனைத்து பொருட்கள் சேவைகளினதும் விலைகளை அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச அமைச்சராக வந்த பின்னர் என்ன செய்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ள அவர் நிவாரணம் வழங்கப்பட்டாதா இல்லை ஆனால் ஒரு விடயம் இடம்பெற்றுள்ளது பசில் ராஜபக்சவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.