இலங்கை எதிர்கொண்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக 3000 கொள்கலன்கள் துறைமுகங்களில் சிக்குண்டுள்ளதாகவும் இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் பொருட்களை பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து  இலங்கைக்கு விடுமுறைக்காக வந்துள்ள பல இலங்கையர்கள் டொலர் நெருக்கடி காரணமாக துறைமுகங்களில் கொள்கலன்களில் உள்ள தங்கள் பொருட்களை உரிய நேரத்தில் பெற முடியாத நிலையில்உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்களுடன் 3000 கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்குண்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதியளவு தொழிலாளர்கள் இல்லாதமையினாலும்  கட்டணங்களை டொலரில் செலுத்துமாறு உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் பொருட்களை பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தொழிலாளர் ஒருவரிடம் ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும் கிறிஸ்மஸிற் முதல் அவர் பொருட்களை பெற முடியாது என தெரிவித்துள்ளனர்.

வங்கிகள் தங்கள் ஆவணங்களை உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலையில் உள்ளன- டொலர்களை வழங்க முடியாத நிலையில் உள்ளன இதனால் இந்த தாமதம் தொடரும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.