மியன்மாரில் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியபோது, பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மியன்மாரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கடந்த பெப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

74 வயதான ஆங் சாங் சூகி ஆட்சி கவிழ்ப்பின் பின்னர்  வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுடன் பல ஊழல் குற்றச்சாட்டுகள் உத்தியோகபூர்வ ரகசிய சட்டத்தை மீறுதல் மற்றும் போது அமைதியின்மையை தூண்டுதல் உட்பட பல குற்றச்சாட்டுகளில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள 11 குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டு நிரூபணமானதால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.