இராஜினாமா செய்வதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்வதாகவும், நாட்டைப் பாதுகாக்க வேண்டிய எந்தத் தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையெனவும் சஜித் பிரேமதாச வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் பாதுகாப்பான சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கூட வழங்க முடியவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த அரசாங்கம் தொடர்பில் இனிமேல் சிறிதளவும் நம்பிக்கை கொள்ள மக்கள் தயார் இல்லையெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமான ஒரு குழுவிற்கு நாட்டை ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் ஒதுங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.