பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொது ஒன்றுகூடல்கள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்கத் தவறியமையே நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயற்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலமும், வைரஸ் பரவும் அபாயத்தை குறைப்பதன் மூலமும் தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தி, எதிர்காலத்தில் மோசமடையாமல் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பண்டிகைக் காலம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் , வணிக வளாகங்களில் விற்பனை மற்றும் கடை திறப்புகள் நடைபெற உள்ளதாகவும், இது ஆண்டின் கடைசி வாரத்தில் நடத்தப்படக் கூடாது என்றும், சுகாதார வழிகாட்டல்களுக்கு இணங்க முன்கூட்டியே முன்னெடுக்கலாம் என்றார்.

ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வர்களை மாத்திரமே வணிக வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்குமாறும், தொற்று பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கடை உரிமையாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.