திருகோணமலை, கிண்ணியா - குருஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம்  தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணனுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்றய தினம் (23) உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு பாலத்தை இயக்க அனுமதி வழங்குதல், பராமரிப்பை யார் மேற்கொண்டது உள்ளிட்ட விடயங்கள் குறித்து உடனடியாகத் தெரிவிக்குமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விசேட பொலிஸ் விசாரணையை மேற்கொள்ளுமாறும் திருகோணமலை மாவட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ்மா அதிபருக்கும், ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.