இனந்தெரியாத நபரின் கத்திக்குத்து தாக்குதலிற்குள்ளாகி கென்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமெஸ் உயிரிழந்துள்ளமை பிரித்தானிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Belfairs Methodist Church பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தொடர்பில் 25 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தியொன்றை மீட்டுள்ளோம் இந்த சம்பவம் தொடர்பில் வேறு எவரையும் தேடவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலிற்கு உள்ளாகி உயிரிழந்த சேர் டேவிட் (69)1983 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்துவந்துள்ளார்.

சவுத்என்ட்வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தனது தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்துகொண்டிருந்தவேளை கத்திக்குத்து தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளார்.

நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்தது நாங்கள் சென்றவேளை அவர் காயங்களுடன் காணப்பட்டார் அவசரகிசிச்சை பிரிவினர் சிகிச்சை வழங்கிய போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து வருடங்களில் கொல்லப்பட்ட இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 இல் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோகொக்ஸ் கொல்லப்பட்டார்.
சேர்டேவிட் ரோமன்கத்தோலிக்க மதபிரிவை சேர்ந்தவர், கருக்கலைப்பிற்கு எதிராக இவர் முக்கியமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.