ஆஸ்திரேலியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம்  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொது முடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தை போலீசார் கலைத்தனர் .

கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் , உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது  , குறிப்பாக சிட்னி, மெல்போர்ன் , நியூ சவுத் வேல்ஸ் போன்ற இடங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு .

இந்தப் பொது முடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மெல்போர்னில்
ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கொரோனா விதிகளை மீறியதாக இதுவரை 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.