அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

 

ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி அந்த நிறுவனம் ஏற்கெனவே அமெரிக்க அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தது. இதையடுத்து தற்போது மருந்துமுகமை அந்த கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். 9 மாதத்திலேயே பாதுகாப்பான, வீரியமிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவத்தின் சாதனை. ஏற்கெனவே அமெரிக்காவின் 50 மாநிலங்களுக்கும் தடுப்பூசி அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வரலாற்றின் மிகப்பெரிய மைல்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கெனவே பிரிட்டன் அரசு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கிய நிலையில் தற்போது அமெரிக்காவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது.