தளபதி 65 படத்திற்கு 'டார்கெட்' என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.

மாஸ்டரை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் பூஜா ஹெக்டே தான் ஹீரோயின்.

வரும் 22ம் திகதி விஜய்யின் 47வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தளபதி 65 படத்தின் டைட்டிலை அறிவிக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது தளபதி 65 படத்திற்கு டார்கெட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

அதென்ன டார்கெட் என்று ஒரு தலைப்பு என ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும் இந்த டார்கெட் தகவலை படக்குழு இதுவரை உறுதி செய்யவில்லை.

விஜய்யின் பிறந்தநாள் அன்று தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. தளபதி 66 படத்தை, தான் இயக்கப் போவதாக பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

விஜய் தன் கையில் இருக்கும் பட வேலையை முடிக்கும் வரை புதுப்படம் குறித்து அறிவிப்பது இல்லை. அதனால் 22ம் திகதி தளபதி 66 பட அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.