கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஆப்பிள் நிறுவனத்தின் மாபெரும் வெற்றியைக் கண்டு யாருக்குத் தான் பொறாமை இருக்காது. ஆப்பிள் நிறுவனத்தைப் போலவே தற்போது பல முன்னணி நிறுவனங்கள் எல்க்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தனது பிராண்டில் தயாரித்து விற்பனை சந்தைக்குக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே மைக்ரோசாப்ட், கூகிள் ஆகிய நிறுவனங்கள் இந்தத் துறையில் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், தற்போது புதிதாகப் பேஸ்புக் நிறுவனம் பிரத்தியேகமாகத் தனது பிராண்டில் ஸ்மார்ட்வாட்ச் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.