மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளைய தினம் ஒவ்வொரு சுகாதார திணைக்கள பகுதிகளிலும் ஆபத்து நிலை அதிகமுள்ள பகுதி மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இதனை இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்துத் தெரிவித்தார்.

நாளைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 25,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் நாளை முதல் இம்மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.