கடந்த மாதம் ஒரு சைபர் இணைய தாக்குதலால் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு, வைகாடோ மருத்துவமனையில் கதிர்வீச்சு சிகிச்சை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தலைமை நிர்வாகி கெவின் ஸ்னி இது மருத்துவமனைக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்றார்.

மேலும் இந்த சேவை முழு திறனுடன் இயங்காது என்றும் சில நோயாளிகள் தவுரங்கா மற்றும் வெலிங்டனில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்கள்.

முதல் சிகிச்சை இன்று காலை தொடங்கியதுடன் தொடர்ந்து  22 நோயாளிகள் இன்று கதிரியக்க சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்

உள்நோயாளிகள் மேலாண்மை, நோயறிதல், கதிரியக்கவியல் மற்றும் ஆய்வக சேவைகள் ஆகியவை இந்த வாரம் மீட்டெடுக்க எதிர்பார்க்கப்படும் பிற சேவைகள் ஆகும்.

கடந்த வாரம் டி.எச்.பி தனது தகவல் தொழில்நுட்ப அமைப்பை மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்க செயல்முறையை மேற்கொண்டது. மேலும் என்ன நடந்தது என்பதையும், மற்றொரு இணைய தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாத்துகொள்வது என்பதையும் டி.எச்.பி முழுமையாகப் புரிந்து கொண்டது, என டாக்டர் ஸ்னீ மேலும் தெரிவித்தார்.