இலங்கையில் கொவிட் பரவல் நிலைமையை கட்டுப்படுத்த அமெரிக்காவினால் பெருந்தொகை மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

விசேட விமானத்தில் மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த மருத்துவ உபகரணங்களின் மொத்த பெறுமதி 6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இலங்கையின் சுகாதாரப் பிரிவுக்கு தேவையான 880,000 மருத்துவ உபகரணங்கள், 1,200 ஒக்ஸ்மீட்டர்கள் என்பன அமெரிக்காவினால் தற்போது வழங்கப்பட்டுள்ளன.