UPDATE 

முக்கிய இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல் உண்மைக்கு புறம்பானது − விசாரணைகள் ஆரம்பம்...

 

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பிரதான பல அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை நில அளவையாளர் திணைக்களம், குடும்ப சுகாதார அலுவலகம், வடமேல் மாகாண பயிற்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு ஆகிய இணையத்தளங்கள் மீதே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது நேற்று முன்தினம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த பின்னணியிலேயே, தற்போது பிரதான 6 இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.