கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பிலான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி ,கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்ணான்டோ மற்றும் ப்ரீதி பத்மன் ஆகிய மூவரடங்கிய நீதியரசர் குழாமினால் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

மேலும் , குறித்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் நாளைய தினம் வரை ஒத்திவைக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.