முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் நிரபராதியென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்கியதன் ஊடாக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.