இலங்கை

இஸ்ரேலுக்குப் பயணிக்கும் பயணிகளுக்கான இலங்கை விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி ஏப்ரல் 18 ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு Arkia Airlines விமானம் ஒன்று வரவுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமன்றி புது டெல்லியிலிருந்து டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு ஏர்-இந்தியா (Air india) விமானங்கள் ஏப்ரல் 18 முதல் மீண்டும் தொடங்கும் என்பதோடு இது கொழும்பிலிருந்து புது டெல்லி வழியாக வரும் பயணிகள் இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், FLY DUBAI ஏர்லைன்ஸ் டுபாய் மற்றும் அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு விமானங்களை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை பயண ஏற்பாடுகளை உறுதிசெய்து, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர், ஏற்கனவே உள்ள விமானப் பயணச்சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகள் தமது முன்பதிவுகளை உறுதிப்படுத்துமாறு தூதுவர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.