இலங்கை

ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் வர்த்தகச் சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருமானம் கணிசமான அளவில் மீண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வை வழங்குவதற்காக இன்று காலை (மார்ச் 26) கூட்டப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பின் போது, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் எஸ். ஜெகஜீவன் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, ஜனவரி முதல் பெப்ரவரி வரையில் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக தொழிலாளர்களின் பணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்த மாதங்களில் சுற்றுலா வருவாய் 687 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்களின் பணம் மற்றும் சுற்றுலா வருவாய் ஆகிய இரண்டும் 2022 ஐ விட கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. மேலும், தொழிலாளர்களின் பணம் 2022 இல் 3.8 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 இல் 6 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

அத்தோடு,  சுற்றுலா வருவாய் 2022 இல் 1.1 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 இல் 2.1 பில்லியன் டொலராக உயர்ந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.