இலங்கை

நாட்டில் கட்டப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார். குறித்த பாலங்களின் ஒரு பகுதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அமைச்சுக்களின் கீழும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் விரைவாக முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.