'லொள்ளு சபா’ புகழ் நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சீக்கிரம் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் படங்களை ஸ்பூஃப் செய்து ஹிட்டான 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலமாக நடிகர்கள் சந்தானம், ஜீவா, மனோகர், சேஷூ என அனைவருமே ரசிகர்களிடையே பிரபலமானார்கள். இந்நிலையில், நடிகர் சேசு மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது நண்பரும் நடிகருமான உதயா முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டுவதாகவும் உருகியுள்ளார்.

இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் சந்தானம், யோகிபாபு ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார் சேஷூ. சமீபத்தில் இவர் சந்தானத்துடன் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இணைந்து நடித்திருந்தார். கொரோனா சமயத்தில் ஓடிப்போய் பலருக்கும் உதவியது, பல ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்தது என உதவும் கொண்டவராகவும் இருந்து வருகிறார் சேசு.

எல்லோரையும் சிரிக்க வைக்க சந்தோஷமா இருக்க வைக்க சீக்கிரம் நலம் பெற்று வா என நண்பர்களும் ரசிகர்களும் அவர் நலம் பெற தங்கள் பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.