Tasman இல் நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை 4 மணியளவில் Tākaka நகரின் தெற்கே உள்ள Pigville சாலையில் உள்ள ஒரு வீடொன்றில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

எதிர்வரும் நாட்களில் பிரேத பரிசோதனை முடிவடையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சடலத்தை முறையான அடையாளம்  காணும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்