நடிகர் அஜித்குமார் துணிவு படத்தை தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் சென்னை வந்த அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், திடீரென்று அஜித்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்டார்.

அஜித்திற்கு காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் வீக்கம் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார் அஜித். இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.