தமிழ் சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்டவராக திகழ்பவர் ஜி.எம். குமார். திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இவர், ஒருக்கட்டத்தில் டைரக்ஷன் தயாரிப்பு கை கொடுக்காமல் போகவே, நடிப்பின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முதன்முதலில் 'கேப்டன் மகள்' என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து தனது நடிப்பு பயணத்தை துவங்கினார்.

இதனையடுத்து தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தவர் வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில் பாலாவின் 'அவன் இவன்' படத்தில் ஹைனஸ் என்ற கேரக்டரில் நடித்து பாராட்டுக்களை அள்ளினார் ஜி.எம். குமார். விஷால், ஆர்யா நடிப்பில் ரிலீசான இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திரம் ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தையும், பாராட்டுக்களையும் பெற்று தந்தது.

தற்போது சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஜி.எம். குமார், தொடர்ச்சியாக பல்வேறு பதிவுகள் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தனது எக்ஸ் தளத்தில் சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில், தனது எக்ஸ் லவ்வரை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூர் வழியாக கோவா சென்று அங்கிருந்து பாம்பே வழியாக மீண்டும் மெட்ராஸ் திரும்பியதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.