இந்தியா: தமிழ்நாடு

கடந்த 2017ஆம் ஆண்டு சேலம் மாநகர், அஸ்தம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஆஜராக வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ஆதாரம் இல்லாமல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் தற்போது என்ஐஏ சோதனை செய்தது ஏன்? என்ஐஏ விசாரணைக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம்.

நாம் தமிழர் கட்சியை யாராலும் உடைக்க முடியாது. நான் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி இருக்கும். எங்கள் கட்சியை முடக்கி வைக்கவே முடியாது. தேர்தலில் யாருடன் கூட்டணினு கேட்கிறீர்களா, நான் அமெரிக்க அதிபர் பைடனுன் போகலாம்னு இருக்கேன். வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன். நான் யாருக்கு எத்தனை சீட், யாருடன் கூட்டணி என்றெல்லா் யோசித்து கொண்டிருக்க மாட்டேன். இருப்பது பாண்டிச்சேரியுடன் சேர்த்து 40 மக்களவை தொகுதியிலும் நாம் தமிழர் போட்டி. 20 ஆண்கள், 20 பெண்கள் இவர்கள்தான் வேட்பாளர்கள். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.