இலங்கை

இந்த ஆண்டு மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரத்தையோ அல்லது மதுபானத்திற்கு மது வரி விதிக்கும் முறையையோ முன்மொழிந்துள்ளதால், விலைகள் அதிகரிக்கலாம் என அவர் கூறுகிறார்.

அதேவேளை  மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பினால் அரசாங்கத்திற்கான வரி வருமானம் அதிகரித்து நுகர்வு குறைவதால் மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்படும் தொகை குறைவாகவே காணப்படுவதாக சம்பத் டி சேரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் மதுவரி 10% அதிகரிக்கப்பட்ட போது மது பாவனை 11.7% குறைந்துள்ளதாக ஆய்வுகள் மற்றும் எதிர் நடவடிக்கைகளுக்கான நிலையம் அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.