நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் உள்ளிட்டோரின் இல்லங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. விவிஐபிகளின் பாதுகாப்பு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

அசாதாரணமான நேரங்களில் தலைவர்கள் பாதுகாப்பாக செல்ல இந்த சுரங்கப்பாதைகள் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிடத்தை வடிவமைத்துள்ள சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் படி பிரதமரின் இல்லம், அலுவலகம் போன்றவை சவுத்பிளாக் பக்கமாக அமைக்கப்படுகிறது.

ஆனால் குடியரசுத் தலைவர் இல்லம் சற்று தூரத்தில் இருப்பதாலும் அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான அவசியம் மிகக்குறைவாக இருப்பதாலும் குடியரசுத் தலைவர் இல்லத்தை சுரங்கத்தால் இணைக்க வேண்டிய கட்டாயம் உருவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்..