கவுன்சில் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மக்களின் வீடுகளுக்குள் சில மர்ம நபர்கள் நுழைவதாக ஆக்லாந்து கவுன்சில் இன்று எச்சரித்துள்ளது.

ஆக்லாந்து கவுன்சில் அதிகாரிகள் எப்போதும் சீருடையில் இருப்பார்கள், கவுன்சில் முத்திரை கொண்ட வாகனத்தை ஓட்டுவார்கள் மற்றும் கவுன்சில் அடையாள அட்டையை எடுத்துச் செல்வார்கள் என்று கவுன்சில் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவர்களை உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கும் முன் எப்போதும் அவர்களின் ஐடியைப் சரிபார்க்குமாறு கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோன்ற ஆள்மாறாட்டம் செய்பவர்களை பார்த்தால் அல்லது எதிர்காலத்தில் யாராவது வருகை தந்தால், 105 என்ற எண்ணை அழைத்து காவல்துறைக்கு புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், சமீபத்தில் கவுன்சில் அதிகாரி ஒருவரைப் பார்த்தவர்கள் அவர்கள் உண்மையில் கவுன்சிலில் இருந்து வந்தவர்களா என்பதைச் சரிபார்க்க விரும்பினால், rbacomms@aucklandcouncil.govt.nz என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என கவுன்சில் தெரிவித்துள்ளது.