மத்திய Palmerston North இல் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை தீயணைப்பு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நள்ளிரவு 1 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தபோது தீ வேகமாக பரவியதாக தெரிவித்தனர்.

Palmerston North, Milson மற்றும் Bunnythorpe ஆகிய இடங்களைச் சேர்ந்த பணியாளர்கள் அதிகாலை 4 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை.

செய்தி நிருபர் - புகழ்