மத்திய North Island இல் உள்ள மாநில நெடுஞ்சாலை 4 இல் இன்று இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி Taumarunui அருகே காலை 11.30 மணிக்கு முன் நடந்த ஒரு வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மாநில நெடுஞ்சாலை 4, Manunui என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து சிறிது நேரம் SH4 மூடப்பட்டதாக Waka Kotahi தெரிவித்தது.

வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டனர்.

இரண்டாவது அபாயகரமான விபத்து Raetahi இல் உள்ள மாநில நெடுஞ்சாலை 4 இல் நண்பகலில் நிகழ்ந்தது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இரண்டு விபத்துகள் குறித்து தீவிர விபத்து பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.