பாமகவில் கட்சியில் இணைந்து செயல்பட்டவர் ராஜேஸ்வரி பிரியா.

பின்னர் அதிலிருந்து விலகி னைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்து பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமூக அக்கறை நிறைந்த ராஜேஸ்வரி பிரியா, இளைய சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களையும் தன்னுடைய பேட்டிகள் மூலம் கூறிவருகின்றார்.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கண்டித்து வரும் இவர் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தன் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தையே நடத்தியவர்.

முன்னதாக 'நாளை தமிழகத்திற்கு முதலமைச்சராக வர நினைக்கும் கமல்ஹாசன் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது' என கமல்ஹாசனிடமே சீறி பாய்ந்த ராஜேஸ்வரி இன்றும் அதே ஆவேசம் குறையாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்துள்ளார்.

மேலும் கமலை எதிர்த்து கேட்டது போல், விசிக தலைவர் திருமாவளவனிடம் நேரடியாகவே பாய்ந்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளரான விசிகவை சேர்ந்த விக்ரமனுக்கு திருமாவளவனே ஆதரவு கேட்டு ட்வீட் போட்டிருந்தார்.

இதுவரை எந்த சீசனிலும் இப்படி நடந்ததில்லை.

பிக்பாஸ் போட்டியாளருக்கு ஒரு அரசியல் தலைவரே வாக்கு கேட்டதும் இல்லை.

பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், திருமாவளவனே இப்படி செய்யலாமா? என்றும் இதற்கு கண்டனங்களும், அதிருப்திகளும் பெருகி வருகின்றன.

அந்தவகையில், ராஜேஸ்வரி பிரியாயும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய முகநூல் பதிவில், 'தொல்.திருமாவளவன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்கு சேகரிப்பது வேடிக்கையாக உள்ளது. எத்தனையோ மக்கள் பணிகள் கிடப்பில் இருக்க தேவையற்ற கலாச்சார சீர்கேட்டிற்கு வித்திடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உங்கள் கட்சிகார தம்பி வெற்றி பெற வாக்கு சேகரிப்பது என்பது அரசியலின் அவலம். சூதாட்டமாக இருந்தாலும் எனது கட்சிகாரன் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவதற்கு சமமாகும்.

ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதனால் அரசியல் செய்ய முடியாமல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்ய தொடங்கியது வேதனை. மண், மக்கள் என்றெல்லாம் பேசி மக்களை ஏமாற்றுவதனை நிறுத்தி கொள்ளுங்கள்' என ஆவேசமாக கூறியுள்ளார்.