ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து கடுமையான வசைமொழியை பயன்படுத்தி ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரோமில் உள்ள புனித நகரமான வத்திக்கான் திருச்சபையில், பாப்பரசர் பிரான்சிஸுக்கும் பேராயர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்தது.

இதன்போது, வத்திகானில் புரோசியாஜினே காற்று வீசி வருவதாகவும், ஓரினச்சேர்கையாளர்கள் வத்திகானுக்குள் நுழையாமல் இருப்பது நல்லது எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

'புரோசியாஜினே' என்ற இத்தாலிய சொல்லுக்கு 'இயற்கையை மீறிய மயக்கம்' என பொருள் உள்ளதோடு இது ஓரினச்சேர்கையாளர்களை குறிப்பதாக கருதப்படுகின்றது.

இதனால், பாப்பரசரின் இந்த கருத்து தற்போது இத்தாலிய ஊடகங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே, பாப்பரசர் இது போன்று ஓரினச்சேர்கையாளர்களை வசைப்பாடும் ஒரு கருத்தை வெளியிட்டமைக்கு மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்நிலையில், அவர் மீண்டும் இவ்வாறு கருத்து வெளியிட்டமையானது அவர் குறித்த சமூகத்துக்கு எதிரானவர் என்ற விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது.