மறைந்த முன்னாள் முதலமைச்சா் எம்ஜிஆாின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஆறுமுச்சந்தியில் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினாா்.

அப்போது எம்ஜிஆரை புகழ்ந்து பேசிய செல்லூர் ராஜூ, திமுகவை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக செல்லூர் ராஜூ பேசியதாவது...

எம்ஜிஆர் மறைந்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் கூட மக்கள் எம்ஜிஆரை மக்கள் நினைக்கின்றனர். எம்ஜிஆரை போன்ற தலைவர் இனி வரமுடியாது. எம்ஜிஆர் போன்ற நபர் இன்று யாரும் இல்லை.

மக்களுக்கான திட்டங்களை அதிமுக விலையில்லா மக்கள் நல திட்டம் என்று கூறியது. ஆனால், திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை இலவசம் எனக் கூறி மக்களை அவமானப்படுத்துகின்றனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த நல திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது.

அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையையும் இன்னும் கொடுக்கவில்லை.

அரசு ஊழியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு அல்வா கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் மின்கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை 6 சதவீதம் வரை உயர போகிறது. இதற்க்கான அனுமதியை மத்திய அரசின் மின்சார வாரியம் வழங்கியுள்ளது

தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யலாம்.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்கள் துன்பத்தில் இருக்கின்றனர். திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்? திமுக ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு என்ன லாபம் கிடைத்துள்ளது என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.