சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி நேற்று முதல் சீதாவக்க பிராந்தியத்துடன் புதிய புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று கன்னி பயணத்தின்போது 50 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்குகொள்கின்றனர்.

வார இறுதியில் மேற்கொள்ளப்படும் இந்த சேவை சுற்றுலா பயணிகளை கவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீதாவக்கபுர சுற்றுலா வலய மேம்பாட்டு திட்டம் குறித்து ஆராய்ந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு இந்த திட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க சீதாவக்க இராட்சியம் பல கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

குறிப்பாக சீதாவக்க பிரதேசத்தின் தாழ் நிலப்பகுதியின் அழகிய சுற்றாடல் பிரதேசம் அங்கு செல்லும் எவரையும் கவரும் தன்மை கொண்டது.

இது தவிர பண்டைய கால வீர விளையாட்டு, பாரம்பரிய தற்காப்பு கலைகள், தொல்பொருள் பிரதேசங்கள் மற்றும் தாவரவியல் பூங்கா போன்றவை அங்கு விஜயம் செய்பவர்களை கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.