அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை நியூ கொலனி  பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் இப்பகுதி மக்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.

அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருகை தந்து கால் நடைகளை எடுத்து சென்றுள்ளன.

இந்நிலையில் 07ஆம் திகதி இரவு சிறுத்தை ஒன்று இப்பகுதியில் வசிக்கும் ஒருவரின்  வீட்டுக்கு வந்து செல்லும் காட்சி, அவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி .சி. டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது.

அத்தோடு மக்கள் நடமாடும் பகுதியில் இரவு வேளையில் வெளிச்சத்திலும்,

 சிறுத்தைகள் வருகை தந்து கால் நடைகளை கொண்டு செல்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக இப் பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் பொது மக்கள் உயிர்களுக்கும் கால்நடைகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,

 இது தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.