பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் கொஞ்ச நஞ்ச பேருக்கு ஒரு கேப்டனை தேர்வு செய்யும் வேலையை துவங்கிவிட்டார்கள்.

ரேங்கிங் டாஸ்கில் முதல் இரண்டு இடத்தை பிடித்த அமுதவாணன் மற்றும் அசீம், ஆக்டிவிட்டி ஏரியாவில் பரவியிருக்கும் கிஃப்ட்டுகளை சேகரித்து உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும் என்று மைனா நந்தினி சொல்வதுடன் ப்ரொமோ வீடியோ துவங்கியிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் ஒரு கிஃப்ட் மட்டுமே எடுக்கலாம். அதிக கிஃப்ட்டுகள் சேகரித்த போட்டியாளர் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்வு செய்யப்படுவார் என மைனா தொடர்ந்து வாசிக்க அசீமும், அமுதவாணனும் கிஃப்ட்டுகளை சேகரிக்க மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மாத்தி யோசிக்க சொன்னதால் இப்படி ஒரு டாஸ்க் போன்று.

தனலட்சுமியே வெளியே போயிடுச்சு. இனிமேல் நீங்க என்ன செய்தால் எங்களுக்கு என்ன. இந்த டாஸ்க்கும் மொக்கையாகத் தான் உள்ளது.

இனிமேல் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. படுத்து தூங்கப் போகிறது பிக் பாஸ். இந்த வாரம் அசீமை வெளியேற்றிவிட்டால் பிக் பாஸ் வீட்டிற்கு பூட்டு போட்டு பூஜை செய்துவிடலாம் என பார்வையாளர்கள் கோபமாக தெரிவித்துள்ளனர்.

டாப் 5 இடத்தில் வர வேண்டிய போட்டியாளர் தனலட்சுமி.

அவரை ஏன் வெளியேற்றினீர்கள் கமல் சார்? இந்த வாரம் அசீம் கேப்டன் ஆக வேண்டும்.

அமுதவாணன் வெளியே செல்ல வேண்டும். வழக்கமாக மணிகண்டனை தானே கேப்டன் ஆக்கி அழகு பார்ப்பீர்கள். அப்படி இருக்கும்போது இந்த வாரம் என்ன அமுதுவை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறீர்கள்? வார இறுதி நாட்களில் கூட பிக் பாஸ் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் பார்வையாளர்கள்.