அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயதான சாமுவேல் ராப்பிலி பேட்மேன் என்ற மத போதகர் 2019 ஆம் ஆண்டு இந்த் குழுவின் தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்யத் தொடங்கினார்.

தற்போது அவர் தனது சொந்த மகள் உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சாமுவேல் கொள்கைகளை சுமார் 50 பேர் பின்பற்றிவந்தனர்.

அவரது 20க்கும் மேற்பட்ட மனைவிகளில் 9க்கும் மேற்பட்டவர்கள் சிறுமிகள் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்டவர்கள்.

அதுமட்டுமின்றி அந்த குழுவின் உறுப்பினர்களையும் தங்களின் சிறு வயது மகள்களுடன் உடலுறவில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சாமுவேல் இதுகுறித்து உரையாற்றும் போது சிறுமிகள் 'இறைவனுக்காக தங்கள் நல்லொழுக்கத்தை தியாகம் செய்தார்கள். கடவுள் அவர்களின் உடலை சரிசெய்து, அவர்களின் உடலில் சவ்வை மீண்டும் வைப்பார் என கூறி உள்ளார்.

கொலராடோ நகரில் உள்ள அவரது இரண்டு வீடுகளில், எப்.பி.ஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு பின் அவரை கைது செய்து அரிசோனா சிறையில் அடைத்துள்ளனர்.