கிழக்கு ஆக்லாந்தில் Panmure என்ற இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து ஒரு ஆரம்பப் பள்ளி காலை பூட்டப்பட்டது.

Panmure இல் Coates Cres என்ற பகுதியில் ஒரு வீட்டில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சம்பவத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் காலை 9.20 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கையாக தமாகி தொடக்கப் பள்ளி பூட்டப்பட்டு சில மணி நேரங்களில் அது மீண்டும் திறக்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.