நடிகை மீனா கடந்த 2009  பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வித்யா சாகரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஜூன் மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.

இதனால் பல வாரங்களாக மனம் உடைந்து துயரத்தில் இருந்த மீனாவை சக தோழி நடிகைகள் நேரில் சென்று ஆறுதல் சொல்லி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தற்போது மீண்டும் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

மீனாவுக்கு 46 வயது ஆகிறது.

இந்நிலையில் மீனாவிடம் குழந்தையின் எதிர்காலம் கருதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், குடும்ப நண்பர் ஒருவரையே மாப்பிள்ளையாக தேர்வு செய்து இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எந்த திட்டமும் தற்போது இல்லை என்று மீனா தரப்பில் மறுத்துள்ளனர்.