கிரிப்டோ கரன்சிகளை கொள்வனவு செய்வதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுவதற்காக இந்த நாட்டில் சுமார் 8000 பேர் “ஸ்பொட் செயின்” எனப்படும் பிரமிட் திட்டத்தில் இணைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார் .

இந்த மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இதுவரை இந்த நாட்டில் மக்களை ஏமாற்றி சுமார் 1400 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு முதல் இந்த வியாபாரம் சீன பிரஜைகள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த வியாபாரத்தின் பிரதான சந்தேகநபரான ஷமல் கீர்த்தி பண்டார கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 

இந்தக் வியாபாரத்தில் ஈடுபட்ட சீன தம்பதியினர் கடந்த 12ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நாட்டை விட்டு தப்பிச் செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.