உள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூடையொன்றின் விலை 21 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள பல வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாம் கோரியுள்ள கோதுமை மா கிடைக்கப்பெற்றதன் பின்னர் கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.